175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பௌத்த விஹாரைகள், பௌத்த வழிபாட்டுத் தளங்கள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. வீதிகளில் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் பௌத்த சிலைகளுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திருகோணமலையில் சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து பௌத்த வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சிலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love