குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஸ்டி முறைமை ஆட்சி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் கூறுவதனைப் போன்று சமஸ்டி முறை ஆட்சியை வழங்கப் போவதுமில்லை எனவும் நாட்டின் காணி நிலங்களை விற்பனை செய்யப் போவதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை அரசாங்கத்திற்கு கிடைக்க இருப்பதனால் இவ்வாறு பொய்ப் பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சமஸ்டி முறை ஆட்சியை ஏற்படுத்தவே ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகின்றது என சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக சுதந்திரம் பிழையான வழியில் பயன்படுத்தப்படுவது வருத்தமும் வேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.