171
இந்தியாவின் பீகார் தலைநகர் பாட்னாவில் கங்கை நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21பேர் உயிரிழந்துள்ளனர். படகில் அளவுக்கு அதிகமான பேர் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் சுமார் 35 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் மகர் சங்கிராந்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Spread the love