191
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் மண் சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கரத்தில் பணி புரிந்த தொழிலாளர்களில் பலர் ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் விபத்துக்குள்ளான சுரங்கம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்ததாகவும் இதனால் அதற்குள் செல்ல விடாமல் அதன் நிர்வாகிகள் தடுத்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சனிக்கிழமை இரவு வரை போலீஸ் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
Spread the love