குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுமன்னிப்பு காலத்தில் சரணடையத் தவறிய படைவீரர்களுக்கு எதிhக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற மற்றும் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத படையினர் முறையாக படைச் சேவையிலிருந்து விலகிக் கொள்ள பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைச் சிப்பாய்கள் , உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு காவல்துறையிடமும், குடிவரவு குடியகழ்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.