குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் பந்து தலையில் பட்டு காயமடைந்துள்ளார். இந்தக் காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்சமயம் வெலிங்டனில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது, துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந் ரஹீம் மீது, நியூசிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ரிம் சுதீ ( Tim Southee )வீசிய பந்து தாக்கிய நிலையில் ரஹீமிற்கு அவரச முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
எனினும் அவர் மேலதிக சிகிச்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானமாக இல்லை எனவும் சிகிச்சைகளின் பின்னர் அவர் மைதானம் திரும்பியுள்ளதாகவும் போட்டியில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.