குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டுமென பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2021ம் ஆண்டு நடைபெறும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரில் ஒருவரை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக நியமிக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என முன்னதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.