குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவன்ட் கார்ட் நிவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த இருவரினதும் கடவுச்சீட்டுக்களையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் 35 மில்லியன் ரூபா லஞ்சம் வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் நிசாங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இருவர் உள்ளிட்ட ஏழு பேர் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்குத் தொடரப்பிலேயே குறித்த இருவரினதும் கடவுச்சீட்டுக்கள் விடுவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.