குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாணின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் எனவும் பாண் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மார்ஜரீன், பால்ம் எண்ணெய், கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இவ்வாறு மூலப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்தால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் விலை உயர்த்துவது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஒரு கிலோ கிராம் மார்ஜரீனுக்கு 185 ரூபாவும், ஒரு லீற்றர் பால்ம் எண்ணெய்க்கு 120 ரூபாவும் வரியாக செலுத்த நேரிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.