குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது இன்றியமையாதது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மனித உரிமை தீர்வுத் திட்டங்கள் தனிப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்தாது என்ற போதிலும் அது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக பலர் இலங்கையில் பாதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் சட்டம் ஒழுங்கை மதித்தல் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பன அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை தேசிய செயல் திட்டம் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.