183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமான முறையில் இந்தியாவை சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் பயண ஆவணங்கள் எதுவமின்றி படகு மூலம் 27 வயதான இலங்கையர் ஒருவர் இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
ராமேஸ்வரத்திற்கு 15 கிலோ மீற்றர் தொலைவில் அவர் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னதாக மற்றுமொரு இலங்கையர் சட்டவிரோதமாக தரையிறங்கி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் 40000 ரூபா செலுத்தி படகில் இந்தியாவை சென்றடைந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Spread the love