193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதுவருட பிறப்பு தினத்தன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Spread the love