குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது
இன்று காலை ஒன்பது முப்பது மணிளவில் கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பொங்கல் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற பொங்கல் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பாட்ட நாகதம்பிரான் கோவிலிலும் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொண்டதுடன் பிரதமவிருந்தினர் உரையினையும் நிகழ்த்தினார்
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத்தளபதி கேணல் ரட்ணப்பிரிய பண்டு ,சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க,,சிவில்ப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்