நைஜீரியாவில் கடந்த ஜனவரி 17ம் திகதி இராணுவ விமானம் அகதிகள் முகாம் மீது தவறுதலாக குண்டு வீசியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 236-ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியிலுள்ள அகதிகள் முகாம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவில் அகதிமுகாம் மீது தவறுதலாக இராணுவம் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Jan 17, 2017 @ 23:12
நைஜீரியாவில் இராணுவ விமானம் அகதிகள் முகாம் மீது தவறுதலாக குண்டு வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியிலுள்ள அகதிகள் முகாம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் இடம்பெற்றதனை இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் உறுதி செய்துள்ளார். நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு பதில் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது