குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் காலப்பகுதியில் இவ்வாறு அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) கைச்சாத்திடப்படும் எனவும் இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களுடன் தனித் தனியாக உடன்படிக்கை கைச்சாத்திட உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் சிங்கப்பூர், பங்களாதேஸ், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மியன்மார் போன்ற நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படக்கூடிய சாத்தியமுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரிச் சலுகைகள், பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சுலபமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் என என பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.