குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் குறித்த சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த சில கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஓரின சேர்க்கையாளர் திருமணங்கள் உள்ளிட்ட சில கோரிக்கைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு பொருத்தமற்ற வகையிலான கோரிக்கைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இன சமூகத்திற்கும் பாதகம் ஏற்படாத வகையிலான கோரிக்கைகளை மட்டுமே இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.