குளோபல் தமிழ்ச் செய்திகள்
பலஸ்தீனத்தின் பாடாவும், எதிர்த்தரப்பான ஹமாஸ் இயக்கமும் கூட்டாக இணைந்து கூட்டு அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இணங்கியுள்ளன. கடந்த மூன்று நாட்களாக மொஸ்கோவில் இது தொடர்பிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இரண்டு அமைப்புக்களும் இணைந்து தேசிய பேரவையை உருவாக்கத் தீர்மானித்துள்ளன. புலம்பெயர்ந்து வாழும் பலஸ்தீனர்களையும் உள்ளடக்கி இந்த பேரவை அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன தலைவர் மொஹமட் அப்பாஸின் பாடா கட்சிக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த 2006ம் ஆண்டில் பாடா மற்றும் ஹமாஸ் தரப்புக்கள் தேர்தலில் போட்டியிட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.