குளோபல் தமிழ்ச் செய்திகள்
பங்காளதேஸ் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் விரல் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்திற்கு எதிராக க்ரைஸ்ட் சேர்ச் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முஸ்பிகுர் பல உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கழுத்துப் பகுதியில் பந்து பட்டு உபாதை ஏற்பட்டிருந்தது, எனினும் விரல் உபாதை மிகவும் மோசமாக காணப்படுகின்றது எனவும் விரலில் ஏற்பட்ட உபாதை குணமடைய சில காலம் காத்திருக்க நேரிடும் எனவும் அணியின் உடற்கூற்றியல் நிபுணர் டீன் கொன்வே தெரிவித்துள்ளார்.
முஸ்பிகுரின் பெருவிரல் எலும்பு முறிவடைந்துள்ளதாகவும் இந்த உபாதை குணமடைவதற்கு சில வார காலம் தேவைப்படும் என்பதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் முஸ்புகுர் பங்கேற்பது கேள்விக்குரியாக மாறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.