முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு கடுமையான இனவாதத்தை பின்பற்றி வருவதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் சில சக்திகள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராபஜக்ஸ தரப்பு கடுமையான இனவாத கொள்கைகளை பின்பற்றி வருகின்றன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களில் சிலரும் அதிகாரம் பகிரப்படுவது தொடர்பில் முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு குறித்து பாராளுமன்றில் நடத்தப்படவிருந்த விவாதம் ரத்து செய்யப்படுவதற்கு சுதந்திரக் கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பே காரணம் என தெரிவித்துள்ள விக்கிரமபாகு நல்லிணக்கம் பற்றி பேசும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், தமது ஆட்சிக் காலத்தில் இனவாதத்தையே விதைத்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.