190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய மாணவன் ஒருவன் கிளிநொச்சியில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே முரசுமோட்டை பகுதியில் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்
Spread the love
1 comment
வீடு திரும்பிய பின்னர், நண்பன் ஒருவரின் வீட்டுக்கு மீண்டும் புறப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.