குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் கருக் கலைப்பிற்கு அனுமதி வழங்கும் சட்டமொன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விசேட சந்தர்ப்பங்களில் இவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளினால் ஏற்படும் கருக்கள், சிறுவயது கர்ப்பங்கள், பிரசவத்தினால் பாரிய ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமைகள் போன்ற சந்தர்ப்பங்களின் போது அவ்வாறான கருவை கலைப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடு செய்பய்பட உள்ளது. நீதி அமைச்சினால் இந்த சட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் கருக் கலைப்பிற்கு அனுமதி வழங்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கருக்கலைப்புச் செய்துகொள்வது சட்டவிரோதமானது என்பதுடன் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத கருக்கலைப்புக்களினால் அதிகளவு மரணங்கள் பதிவாகின்றதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.