குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவை ஐக்கியப்படுத்தப் போவதாக புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ள அவர் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க உள்ளதாகவும் பலம்பொருந்திய இராணுவத்தை கட்டி எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சில தசாப்தங்களாக ஆற்றப்படாத சேவை நாட்டு மக்களுக்கு ஆற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்கர்கள் புத்திசாதூரியமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ராம்ப் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.