திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்களா விரிகுடாவின் பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய சாத்தியமுண்டு என குறிப்பிட்டுள்ள அவர் வட மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தேச எட்கா உடன்படிக்கை இந்த ஆண்டின் நடுப்பகுதியளவில் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.