இலங்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களில் சில சாதக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சயிட் ஹல் ஹூசெய்ன் சந்தித்துள்ள அவர் அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையிலான மாற்றத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை ஆற்றுப்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் சயிட் ஹல் ஹூசெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.