185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்( James Dauris ) டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் டெனியல் பெயின்டர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். டெங்கு நோய் பரவுவதல் இலங்கையின் சுற்றுலாத்துறையை மோசமாக பாதிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் நாட்டு பிரஜைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
Spread the love