குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(20) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில்நந்தனன் தலைமையில் இடம்பெற்றது.
கடற்றொழில், மாடு வளர்ப்பு, கணனி , மின்னியல், தையல், தச்சு வேலை போன்ற துறைகளில் சுயதொழில் புரியவுள்ள காரைநகர் பிரதேச செயலக பிரிவினைச்சேர்ந்த 17 பேர் தெல்லிப்பளை பிரிவினைச்சேர்ந்த 6 பேர் சங்கானை பிரிவினைச்சேர்ந்த 6 பேர் பருத்தித்துறை பிரிவினைச்சேர்ந்த 6பேர் ஊர்காவற்றுறை பிரிவினைச்சேர்ந்த 7பேர் நல்லூர் பிரிவினைச்சேர்ந்த 7பேர் சண்டிலிப்பாய் பிரிவினைச்சேர்ந்த 6 பேர் கோப்பாய் பிரிவினைச்சேர்ந்த ஒருவர் உடுவில் பிரிவினைச்சேர்ந்த 5 பேர் பயனாளிகள் இச்சுயத்தொழில் கடனை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன், நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.புகேந்திரன், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பொறுப்பதிகாரி லெப்டினல் கர்னல் மடுகல்ல இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் சேதுகாவலன் மற்றும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.