162
குளோபல் தமிழ்ச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
போலி நாணயத் தாள்களை அச்சிடும் கணினி மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் நான்கு என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 18 முதல் 27 வயதெல்லைக்கு உட்பட்ட ஐந்து இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதுக்குடியிருப்பு நீதவானின் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
Spread the love