199
குளோபல் தமிழ்ச் செய்திகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக இலங்கையின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அநேகமான போராட்டங்கள் இன்றைய தினமும் நாளைய தினமும் நடத்தப்பட உள்ளது.
கொழும்பு காலி முகத் திடலில் நாளைய தினம் இவ்வாறான ஓர் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிளிலும் மலையகத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன் எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்பட உள்ளன.
தமிழ் இளைஞர் அமைப்புக்கள் பலவும் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love