ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை இரவு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு இந்திய ஜனாதிபதி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் எனத் தெரிய வந்துள்ளமையால் அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடியாக இன்று காலை சென்னை அனுப்பப்பட்டுள்ளது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டம், சுற்றுச்சுழல், கலாச்சாரம் ஆகிய அமைச்சகங்களுக்கு நேற்று அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர்கள் நேற்று மாலையே அனுப்பி வைத்துள்ள நிலையில் நேற்றிரவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில அவசரசட்ட முன்வடிவு ஜனாதிபதி; ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை எனவும், அதன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே அனுப்பலாம் எனவும் தெரிய வந்துள்ள நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் இறுதி செய்யப்பட்ட முன்வடிவு சென்னை தலைமை செயலகத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.