148
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வித உடன்படிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கைச்சாத்திடவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாகவும் இதில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர் தொடர்பிலான விடயங்கள் எதிலும் கைச்சாத்திடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love