159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளார். விதுர, பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் முன்னதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், தற்பொழுது அந்த தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக விதுர விக்ரமநாயக்க அறிவித்துள்ளார். தமது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கைகளின் காரணமாக இவ்வாறு தீர்மானத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love