குளோபல் தமிழ்ச் செய்திகள்
சில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடு அல்ல எனவும், எனினும் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைக்கு தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர் எனவும் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கோரி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கொண்ட அரசாங்கத்திற்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் எனவே, மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கோரும் தமிழ் தலைவர்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தமிழ் சிங்கள மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் டிலான் பெரேரா எச்சரித்துள்ளார்.