குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் தேச விரோத செயற்பாடுகளை கூட்டு எதிர்க்கட்சியினால் மட்டுமே தடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் நாட்டின் உடமைகளை விற்பனை செய்வதாகவும் அதனை தடுக்கும் ஆற்றல் தமது தரப்பிற்கு மட்டுமே உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுவலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், இதனை சரிசெய்ய அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜேவிபி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன, தேசிய அரசாங்கத்தின் பங்குதாரர்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அவர்களால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது எனவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வெற்றியீட்டும் எனவும் தினேஸ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.