குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.கொக்குவில் பகுதியில் கும்பல் ஒன்றின் தாக்குதலால் இரண்டு வீடுகள் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்று சேதமாகி உள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று முன்னதாக வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு வர்த்தக நிலையத்தை சேதமாக்கினர்.
அதன் பின்னர் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியினை மறித்து தாக்கி முச்சக்கர வண்டியினை சேதமாக்கியதுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
பின்னர் அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த மூவர் காயங்களுக்கு உள்ளனார்கள். அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதமாக்கி விட்டு தாக்குதலாளிகள் தப்பி சென்று உள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.