மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் நடிகர் ராகவா லோரன்ஸ் சமதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழக ஆளுநரின் உரையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்கப்படும் என கூறப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசின் இந்த உறுதி மொழியை மதுரை அலங்காநல்லூர் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர்களைப் போல் நாமும் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநர் கூறியிருப்பதை அனவைரும் ஏற்க வேண்டும் எனவும் தடியடி நடத்தியதற்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது எனவும் நடிகர் லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், இந்த கலவரம் மாணவர்கள் செய்ததல்ல என்றும், மாணவர்களின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போராட்டக்காரர்களும் போராட்டத்தைக் கைவிட்டு மெல்ல மெல்ல கலைந்து செல்கின்றனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன .
மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதையடுத்து சிதறியோடிய போராட்டக்குழுவினர் கடலோரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.