159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் வீரர் ரபால் நடால் அவுஸ்திரேலிய ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 30 வயதான நடால், பிரெஞ்சு வீரர் கால் மொன்பில்ஸ்ஸை (Gael Monfils ) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
6-3 6-3 4-6 6-4 என்ற செற் கணக்கில் கால் மொன்பில்ஸ்ஸை வீழ்த்தி நடால் வெற்றியீட்டியுள்ளார். 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக டென்னிஸ் தர வரிசையில் 9ம் இடத்தை வகிக்கும் நடால், மிலோஸ் ரோனிக்கை ( Milos Raonic) காலிறுதிச் சுற்றில் எதிர்கொள்ள உள்ளார்.
Spread the love