குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கைது செய்பய்பட்ட பிள்ளையான் தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி பிள்ளையான் சட்டத்தரணி ஊடாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு, இன்றைய தினம் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மனுவை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் திகதியை நிர்ணயத்துள்ளது.