149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக்கட்சி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதனை ஐக்கிய தேசியக் கட்சி தடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட எதிர்க்கட்சியினர் எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஒரு சிலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினதும் கூட்டு எதிர்க்கட்சியினதும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love