குளோபல் தமிழ்ச் செய்திகள்
சிரியாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கஸகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்து ரஸ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள சமாதான பேச்சுவார்த்தைகளில் ஆயுத கிளர்ச்சியாளர்களும் பங்கேற்க வேண்டுமெனவும் இந்த முயற்சிக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் எனவும் இந்த மூன்று நாடுகளும் கோரியுள்ளன.
யுத்த நிறுத்தம் வெறும் ஆவணத்தில் கையொப்பமிடுவதாக அமைந்து விடக் கூடாது எனவும், நடைமுறையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி Staffan de Mistura தெரிவித்துள்ளார்.