குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என பிணைப்பத்திர ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் மஹாவலி அபிவிருத்தித் திட்டம் கடன் மூலம் முன்னெடுக்கப்பட்டது எனவும் ஆர். பிரேமதாச காலத்தில் கடன் பெற்று வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது எனவும் சந்திரிக்கா கடன் பெற்றுக் கொண்டு புலிகளுடன் யுத்தம் செய்தார் எனவும் இவ்வாறு அனைத்து அரசாங்கங்களும் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்த போது கடன் தொகை 7,391 பில்லியன் ரூபா எனவும், இந்த இரண்டு காலப் பகுதியில் மொத்தக் கடன் 9,730 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.