குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடி குறித்து இன்றைய தினமும் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது. பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக ஊழியர் சேமலாப நிதிக்கு கடந்த 14 மாதங்களில் 1490 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடி குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறிகளை கொள்வனவு செய்யும் ஏனைய நிறுவனங்கள் 30 வீத வருமானத்தை பதிவு செய்யும் அதேவேளை, பேர்பஸூவெல் பேர்பஸூவெல் ரெசறீஸ் (Perpetual Treasuries )நிறுவனம் 1853 வீத லாபத்தை பதிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் 13,000 மில்லியன் ரூபா லாபமீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.