குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நடந்த சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிலரால் குற்றஞ் சாட்டப்பட்டாலும் கூட ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகம் என்பன அதிகளவில் காணப்பட்ட கடந்த அரசாங்கத்திலிருந்து தான் பதவி விலகியது மீண்டும் அவ்வாறானதொரு நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (25) பிற்பகல் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பிணைமுறி தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒருவரையொருவர் வெறுமனே குற்றஞ்சாட்டிக் கொள்வதாக மட்டுமே இருந்ததாகவும் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உண்மையாக நிறைவேற்றுவதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும்ம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.