Home இலங்கை குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டிக்கவில்லை – நாமல் ராஜபக்ஸ

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டிக்கவில்லை – நாமல் ராஜபக்ஸ

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டிக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதாகக் கூறி ஆட்சி பீடம் ஏறிய  அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை கடந்தும், அறிக்கைகளை மட்டுமே தயாரித்து வருவதாகவும் இன்னமும் எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஸ ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More