இந்தியாவின் 68-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்துகொண்டார்.
இதேவேளை குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தின விழாவையொட்டி மரீனா கடற்கரை சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் வன்முறை ஏற்பட்டதால் குடியரசு தினவிழாவின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.