குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கைது செய்யப்பட உள்ளார். கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் ரியர் அட்மிரால் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் ராமஜெயம் ட்ரொஸ்கியிடம் தெரிவித்துள்ளனர்.
2009ம் ஆண்டு இரண்டு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இந்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட உள்ளார்.
இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினன் கமான்டர் தம்மிக்க அனில் மாபாவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு இரண்டு பேர் கடத்தப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வெலிசறை இராணுவ முகாமில் வைத்து மீட்கப்பட்டிருந்தது. இதேவேளை, வாகனத்தில் குண்டு காணப்படும் என்ற அச்சத்தில் அதனை பல பாகங்களாக பிரித்ததாகவும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.