குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹொரணை டயர் உற்பத்திசாலை காணி சரியான விலைக்கே வழங்ப்பட்டுள்ளது என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஒரு ஏக்கர் காணி 100 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹொரணை டயர் உற்பத்திசாலைக்கு யார் முதலீடு செய்கின்றார்கள் என்பது பற்றி தாம் முன்கூட்டியே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்துள்ளதாகவும் இது குறித்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பல அமைச்சரவை கூட்டங்களில் இது குறித்து பேசப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு ஏக்கர் 100 ரூபாவிற்கு வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் இந்தக் காணியை அரசாங்க பிரதான மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்து 17 கோடி 08 லட்சத்து 25ஆயிரம் ரூபா என மதிப்பீடு செய்திருந்தார் எனவும், இந்த தொகையை முழுமையாக செலுத்த முதலீட்டாளர்கள் இணங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் காணிப் பகுதி எவ்வித பயன்பாட்டுக்கும் பொருத்தமானதல்ல எனவும், உற்பத்திசாலை அமைக்கும் வகையில் காணியை அபிவிருத்தி செய்ய சுமார் 300 முதல் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டியேற்படும் எனவும் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.