குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவிற்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒரு போதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியதில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hua Chunying தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் சீன நிறுவனங்களின் முயற்சியான்மை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கையிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் முதலீட்டு வலயத்திற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் சிறியளவில் போராட்டமொன்று நடத்தப்பட்டதாகவும் அது, பிழையான புரிதல் காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அபிவிருத்தித் திட்டம் குறித்து போதியளவு தெளிவற்ற காரணத்தினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கைக்கு உச்ச அளவில் உதவிகளை வழங்கவே சீனா விரும்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.