கேரளாவின் கண்ணூர் மாவட்டம் தலசேரி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டத்தில் குண்டுவீச்சு இடம்பெற்றுள்ளது. இந்தப்பகுதியில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கட்சியின் மாநில செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை முதலே இது தொடர்பாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதமும் நடந்து வந்தது.
இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அப்பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற இனம்தெரியாதவர், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை நோக்கி வீசிய வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் ஒருவர் காயம் அடைந்தார்.
தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டத்தில் குண்டு வீச்சு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கண்ணூரை அடுத்துள்ள நடபுரம் பகுதியில் பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு இனம்தெரியாதவர்கள் தீவைத்தனர். அத்துடன் வடகரா பகுதியில் உள்ள இன்னொரு பாரதிய ஜனதா அலுவலகமும் சூறையாடப்பட்டது.
கண்ணூர் மாவட்டத்தில் மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் – பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கண்ணூர் மாவட்டத்தில் அரசியல் மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.