குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம் பிடிப்பார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது சொந்தக் கட்சியை தாமாகவே தோற்கடித்த மிகவும் அற்புதமான தலைவராக மைத்திரி வரலாற்றில் இடம் பிடிப்பார் என தெரிவித்துள்ள அவர் அனைவரும் இணைந்து மஹிந்த ராஜபக்ஸ யுகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
சில தரப்பினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புகின்றனர் எனவும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இரவில் விழுந்த குழியில் பகலில் விழப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
1 comment
தனது சொந்தக் கட்சியை தாமாகவே தோற்கடித்த மிகவும் அற்புதமான தலைவராக மைத்திரி வரலாற்றில் இடம் பிடிப்பார் என தெரிவித்துள்ள, சட்டம் படித்த சட்டாம்பிள்ளை திரு. GL. பீரிஸின் வாய்முகூர்த்தம் மெய்ப்பட வேண்டும்!
பதவியில் இருக்கும் எந்தவொரு அரசும் தனது கட்சி நலன் கருதி, அதிகாரப் பகிர்வொன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணத் துணியப் போவதில்லை! அந்த வகையில், திரு. மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டு நலனிலும், சிறுபான்மையினர் நலனிலும் உண்மையான அக்கறை இருக்குமானால், கட்சி நலனைப் பொருட்படுத்தாமல் திரு. பீரிஸ் சொல்வதை மெய்ப்பிப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும்! ‘யாரோ குற்றித்தான் அரிசியாக வேண்டும்’, என்றிருந்தால், இன்னுமொரு தவணைக்கு பதவியில் இருக்கும் ஆசையற்ற இவர் அதைத் துணிவுடன் செய்யலாமே?
நாட்டு நலனைப் பொறுத்த வரை, இது பேராசைதான்! ஆனாலும் நியாயமான ஆசை என்பதால், ஜனாதிபதி சிந்தித்துச் செயற்படுவாரா?