குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். நுகேகொடையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்வது குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டுமெனவும் மத்திய வங்கி பிணை முறி மோசடியின் ஊடாக திரட்டப்பட்ட சொத்துக்கள் தமது ஆட்சிக் காலத்தில் அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு குறித்த தரப்பினர் தனியார் ஊடகமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு இலங்கைப் படையினரை தண்டிக்க முயற்சிக்கப்படுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.